மூன்றாவது டெஸ்ட்: பிளேயிங் லெவன் குறித்து விராட்டின் பதில்!

Updated: Tue, Aug 24 2021 18:39 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகலுக்கும் இடையேயான் மூன்றாவது டெஸ்ட் லீட்ஸில் நாளை தொடங்குகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கும் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதன்படி முதல் டெஸ்டில் விளையாடியபோது காயமடைந்த ஷர்துல் தாக்கூர், 2ஆவது டெஸ்டிலிருந்து விலகினார். நான்கு வேகப்பந்து வீச்சாளர் + ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்கிற கூட்டணியே இந்தத் தொடரில் தொடரும் என முதல் டெஸ்டின் முடிவில் விராட் கோலி தகவல் தெரிவித்தார். இதனால் 2ஆவது டெஸ்டில் ஷர்துல் தாக்குருக்குப் பதிலாக இஷாந்த் சர்மா இடம்பெற்று சிறப்பாகப் பந்துவீசினார். 

காயத்திலிருந்து குணமான ஷர்துல் தாக்குர், 3ஆவது டெஸ்டில் விளையாடுவதற்கான உடற்தகுதியை அடைந்துள்ளார். ஷர்துல் தாக்கூரை அணியில் சேர்த்தால் அவருடைய பேட்டிங் திறமை உதவியாக இருக்கும் என கோலி கருதினார். அதனால் தான் முதல் டெஸ்டில் தாக்குர் இடம்பெற்றார். 

எனினும் 2ஆவது டெஸ்டில் இஷாந்த் சர்மா சிறப்பாகப் பந்துவீசியதால் 3ஆவது டெஸ்டில் இருவரில் யார் இடம்பெறுவார் என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு விராட் கோலி பதில் அளித்துள்ளார்.

Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இதுகுறித்து பேசிய கோலி, “காயம் எதுவும் இருந்தால் தவிர, அணியில் மாற்றம் செய்ய எந்தக் காரணமும் எங்களிடம் இல்லை. இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வெற்றிக் கூட்டணியை மாற்ற யாரும் விரும்பமாட்டோம். 2ஆவது டெஸ்டுக்குப் பிறகு களத்தில் இறங்க அனைவரும் ஆர்வமாக உள்ளார்கள். அணியில் 12 பேரைத் தேர்வு செய்து ஆடுகளத்தின் தன்மை, வானிலை ஆகியவற்றை முன்வைத்து 11 வீரர்களைத் தேர்வு செய்வோம்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை