ஐசிசி தரவரிசை: ஆஸியைப் பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. டெஸ்ட் மற்றும் டி20 அணிகளின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. 2020 ஆம் ஆண்டு மே முதல் நடந்த மே 2022 வரை போட்டிகளின் முடிவுகள் 50 சதவீதமும், நடப்பு சீசன் போட்டிகள் முழுமையாகவும் கணக்கில் கொள்ளப்படும். இதன் அடிப்படையில் வருடாந்திர தரவரிசையில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
இதில் டி20 தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திலும் , இங்கிலாந்து அணி 2ஆவது இடத்தில உள்ளது. டெஸ்ட் தரவரிசையில் 121 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணியை பின்னுக்கு தள்ளி இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 2ஆவது இடத்தில் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. உலக டெஸ்ட் சாம்பியஷிப்பின் இறுதிப்போட்டி ஜீன் மாதம் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தவறவிட்ட இந்தியா இந்த முறை அதை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.