இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர். ஐபிஎல்லில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் ஆடிவருகிறார். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான தீபக் சாஹர், இந்திய அணிக்காக 7 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
 
ஐபிஎல்லில் சிஎஸ்கேவின் நட்சத்திர வீரராக திகழும் தீபக் சாஹர் 63 போட்டிகளில் ஆடி 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிஎஸ்கே அணிக்காக பவர்ப்ளேயில் அருமையாக பந்துவீசி தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்கும் பணியை செவ்வனே செய்துவந்த தீபக் சாஹரை, 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் ரூ.14 கோடி என்ற பெரும் தொகையை கொடுத்து ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே அணி.

Advertisement

ஆனால் காயம் காரணமாக ஐபிஎல் 15ஆவது சீசன் முழுக்க தீபக் சாஹர் ஆடவில்லை. இன்னும் 2 மாதங்களுக்கு அவர் ஆடமுடியாது. இந்நிலையில், தீபக் சாஹர் அவரது காதலி ஜெயாவை வரும் ஜூன் 1ஆம் தேதி திருமணம் செய்கிறார்.

Advertisement

தீபக் சாஹர் - ஜெயா காதல் நல்லவிதமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், தங்களது உறவை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்துகின்றனர். வரும் ஜூன் 1ம் தேதி அவர்கள் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர். திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News