IND vs ENG, 5th T20I: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி இன்று வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் தோல்வியைத் தழுவியது. அதன்பின் நடைபெற்ற நான்காவது போட்டியில் வெற்றிபெற்றதுடன் டி20 தொடரையும் வென்றுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என்பதால் இப்போட்டியின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ஹர்ஷித் ராணா இடம் பெற வாய்ப்பு.
கடந்த போட்டியில் காயமடைந்த ஷிவம் தூபேவுக்கு பதிலாக கன்கஷன் சப்ஸ்டிடியூட்டாக களமிறங்கிய ஹர்ஷித் ராணாவுக்கு இப்போட்டியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த போட்டியில் அவர் 4 ஓவர்களில் 33 ரன்களை கொடுத்திருந்தாலும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக அவர் இப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் நிச்சயம் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரவி பிஷ்னோய் அல்லது அர்ஷ்தீப் சிங் வெளியேறக்கூடும்.
ஹர்ஷித் ரானா பிளேயிங் லெவனில் விளையாடும் பட்சத்தில் ரவி பிஷ்னோய் அணியில் இருந்து நீக்கபட அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வான்கடே மைதானத்தில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க இந்திய அணி யோசிக்கும். அதனால் இப்போட்டியில் அர்ஷ்தீப் சிங் இடம்பிடிப்பது சந்தேகம் தான். மேற்கொண்டு இப்போட்டிக்கான இந்திய அணியின் ரமந்தீப் சிங் இடம்பிடிக்கவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய அணியின் உத்தேச லெவன்: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ்(கே), திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் தூபே/ரமந்தீப் சிங், ரிங்கு சிங், அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய்/ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.