மகளிர் டி20 உலகக்கோப்பை, தென் ஆப்பிரிக்க தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!

Updated: Wed, Dec 28 2022 22:06 IST
Image Source: Google

இந்திய மகளிர் அணி சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு தொடரில் விளையாடுகிறது.

இந்த முத்தரப்பு தொடரில் தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுடன் இந்திய அணி விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியானது ஜனவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் முத்தரப்பு தொடர் மற்றும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்களுக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையியில் இந்திய அணி இத்தொடர்களை எதிர்கொள்கிறது. மேலும் இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனா செயல்படுகிறார்.

மேலும் இந்த அணியில் ஷஃபாலி வர்மா, யஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, ரேனுகா சிங் என அனைத்து நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். 

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ஷிகா பாண்டே

ரிசர்வ் வீரர்கள்: சப்பினேனி மேகனா, சினே ராணா, மேக்னா சிங்.

முத்தரப்பு தொடருக்கான இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா, யாஸ்திகா பாட்டியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, தேவிகா வைத்யா, ராஜேஸ்வரி கயக்வாட், ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், மேக்னா சிங், அஞ்சலி சர்வானி, சுஷ்மா வர்மா, அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரகர், சபினேனி மேகனா, சினே ராணா, ஷிகா பாண்டே.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை