தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் பங்கேற்றுள்ள இந்திய அணியானது லீக் சுற்றில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இதனால் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், அதனைத்தொடர்ந்து இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் இந்திய அணியானது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு அணிகளுக்குமான இத்தொடரானது நவம்பர் 08ஆம் தேதி தொடங்கி - நவம்பர் 15ஆம் தேதி முடிவடையவுள்ளது. மேலும் டர்பன், செஞ்சூரியன், ஜொஹன்னஸ்பர்க் மற்றும் க்கெபெர்ஹா ஆகிய மைதானங்களில் இத்தொடரின் போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்கா - இந்தியா போட்டி அட்டவணை
- நவம்பர் 8, முதல் டி20 போட்டி - டர்பன்
- நவம்பர் 10, இரண்டாவது டி20 போட்டி - க்கெபெர்ஹா
- நவம்பர் 13, மூன்ராவது டி20 போட்டி, செஞ்சுரியன்
- நவம்பர் 15, நான்காவது டி20 போட்டி - ஜோஹன்னஸ்பர்க்