SA vs IND: டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!

Updated: Tue, Dec 07 2021 17:28 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா -இந்தியா அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்குகிறது. 

இதற்கு டீன் எல்கர் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. கடைசியாகக் கடந்த 2019-இல் விளையாடிய டுவான் ஆலிவர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்ட முக்கியப் பந்துவீச்சாளர்கள் ககிசோ ரபாடா மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

மேலும் வேகப்பந்துவீச்சாளர் சிசண்டா மகலா மற்றும் விக்கெட் கீப்பர் பேட்டர் ரியான் ரிக்கெல்டன் ஆகியோர் அறிமுக வீரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.  

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி: டீன் எல்கர் (கேப்டன்), டெம்பா பவுமா (துணை கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ககிசோ ரபாடா, சாரெல் எர்வீ, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, கேசவ் மகாராஜ், லுங்கி இங்கிடி, ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், அன்ரிச் நோர்ட்ஜே, கீகன் பீட்டர்சன், ராசி வாண்டர் டுசன், கைல் வெர்ரீன், மார்கோ ஜான்சென், கிளென் ஸ்டர்மேன், பிரேனலன் சுப்ராயென், சிசண்டா மகலா, ரியான் ரிக்கெல்டன், டுவான் ஆலிவர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை