ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 

Advertisement

இதில் நாளை நடைபெறும் வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்திய அணி, ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- இந்தியா vs ஆஃப்கானிஸ்தான்
  • இடம் - சேக் சயீத் மைதானம், அபுதாபி
  • நேரம்- இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது. அதன்பின் 2 ஆவது போட்டியில் நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

2 தோல்வியை தழுவிய இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டது. எஞ்சிய 3 ஆட்டங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அதே நேரத்தில் நியூசிலாந்து ஒரு ஆட்டத்தில் தோற்க வேண்டும். அப்படி நிகழ்ந்தால் மட்டும் இந்தியா வாய்ப்பை பெறலாம். இது மிகவும் கடினமான ஒன்றாகும்.

Advertisement

மேலும் கடந்த ஆட்டத்தில் வீரர்கள் தேர்விலும், பேட்டிங் வரிசையிலும் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடுவது தான் மிகவும் முக்கியமானது.

அதேசமயம் ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை ஸ்காட்லாந்து, நமீபியா (62 ரன்) ஆகியவற்றை வீழ்த்தியது. பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

அந்த அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து 3ஆவது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. மேலும் அந்த அணியில் ரஷித் கான், முஜிப் உர் ரஹ்மான் ஆகியோர் அபாரமான ஃபார்மில் இருப்பது நிச்சயம் இந்திய அணிக்கு தலைவலியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 2
  • இந்தியா வெற்றி - 2
  • ஆஃப்கானிஸ்தான் வெற்றி - 0

உத்தேச அணி 
இந்தியா
- இஷான் கிஷன், ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி (கே), ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி/ ஆர் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா

ஆப்கானிஸ்தான் - ஹஸ்ரதுல்லா ஸஸாய், முகமது ஷசாத், ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லாஹ் சத்ரான், உஸ்மான் கானி, முகமது நபி (கே), குல்பதின் நைப், ரஷித் கான், கரீம் ஜனத், ஹமித் ஹசன், நவீன்-உல்-ஹக்

Advertisement

Also Read: T20 World Cup 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷான், முகமது ஷசாத்
  • பேட்டர்ஸ் - கேஎல் ராகுல், விராட் கோலி, ஹஸ்ரத்துல்லா ஸஸாய், நஜிபுல்லா சத்ரன்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, முகமது நபி
  • பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா, ரஷித் கான், நவீன் உல் ஹக்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News