IND vs AUS, 1st Test: போட்டி முன்னோட்டம், உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, Feb 08 2023 21:09 IST
India vs Australia, 1st Test – IND vs AUS Cricket Match Preview, Prediction, Where To Watch, Probabl (Image Source: Google)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் முதல் டெஸ்ட் நாக்பூரிலுள்ள  விதர்பா மைதானத்தில் நாளை தொடங்குகிறது. டெஸ்ட் தரவரிசையில் முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs ஆஸ்திரேலியா
  • இடம் - விதர்பா கிரிக்கெட் மைதானம், நாக்பூர்
  • நேரம் - காலை 9.30 மணி

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் மிகவும் பலமிக்கதாக உள்ளது. இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம்பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. கேப்டன் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக ஷுப்மன் கில் களம் இறங்குவார் என தெரிகிறது. புஜாரா, விராட் கோலி தங்கள் இடத்தை தக்க வைத்துக்கொள்வர்.

ரிஷப் பந்த் இல்லாததால் கே.எஸ்.பரத் விக்கெட் கீப்பராக இடம்பெறுகிறார். மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், கேஎல்ராகுல் இடையே போட்டி உள்ளது. பிட்ச் முதல் நாளில் இருந்தே சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்தியா ஆல் ரவுண்டர்கன் ஜடேஜா, அஸ்வின், அக்ஸ்ர் பட்டேல், குல்தீப் யாதவ் என 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறகவும் வாய்ப்புள்ளது. 

அதேசமயம் வேகப்பந்து வீச்சில் நட்சத்திர வீரர்களான முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி இந்திய பவுலிங் யுனிட்டை வழிநடத்துவார்கல் என்று எதிபார்க்கப்படுகிறது. மேலும் இத்தொடரை 3-1 அல்லது 3-0 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

மறுபுறம் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா  மிகவும் வலுவாக உள்ளது. பேட்டிங்கில் உஸ்மான் கவாஜா, வார்னர், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி என சிறந்த பேட்டிங் வரிசை உள்ளது.

காயம் காரணமாக கேமரூன் கிரீன் முதல் டெஸ்ட்டில் விலகியதால், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் இடம்பெறுகிறார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டார்க், ஹேசல்வுட் காயம் காரணமாக முதல் டெஸ்ட்டில் ஆடாத நிலையில், நாதன் லயன், ஆஷ்டன் அகர் ஆகிய ஸ்பின்னர்களுடன், வேகத்தில் கேப்டன் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் கடந்த் 2004ஆம் ஆண்டுக்கு பின் இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. அதனால் இந்த முறை தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேபோல் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே அடுத்தடுத்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இந்தியாவிடம் இழந்துள்ளது அதனை திரும்ப கைப்பற்றும் முயற்சியிலும் ஆர்வம் காட்டும் என்பதால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 102
  • இந்தியா - 30
  • ஆஸ்திரேலியா - 43
  • டிரா - 28
  • முடிவில்லை -01

போட்டியை காணும் முறை

இத்தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளதால் இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளிலும், ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்டாரிலும் ரசிகர்கள் காணலாம். அதேபோல் அரசு தொலைக்காட்சியான டிடி ஸ்போர்ட்ஸிலும் இப்போட்டியை இலவசமாக காணலாம்.

உத்தேச அணி

இந்தியா – ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், சட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷுப்மன் கில், கேஎஸ் பாரத், ரவீந்திர ஜடேஜா/அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.

ஆஸ்திரேலியா - உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், ஆஷ்டன் அகர், நாதன் லையன், பாட் கம்மின்ஸ் (கே), ஸ்காட் போலண்ட்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - அலெக்ஸ் கேரி
  • பேட்டர்ஸ் - உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, ஷுப்மான் கில்
  • ஆல்-ரவுண்டர்கள் - மார்னஸ் லாபுசாக்னே, ரவீந்திர ஜடேஜா / அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின்
  • பந்துவீச்சாளர்கள் - பாட் கம்மின்ஸ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

கேப்டன் (ம) துணை கேப்டனுக்கான விருப்பங்கள் - உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, மார்னஸ் லாபுசாக்னே, ரவிச்சந்திரன் அஸ்வின்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை