இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர், 5ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Dec 20 2022 12:41 IST
India vs Australia, 5th T20I – IND-W vs AUS-W Cricket Match Preview, Prediction, Where To Watch, Pro (Image Source: Google)

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் 21 ரன் வித்தியாசத்திலும், 4-வது ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடக்கிறது. கடந்த ஆட்டத்தில் காயம் அடைந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி உடல் தகுதியை எட்டவில்லை. இதனால் தாலியா மெக்ராத் அணியை வழிநடத்துகிறார்.

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக உள்ளது. இந்திய அணியின் பவுலிங் மெச்சும் வகையில் இல்லை. இந்திய அணி பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். இரு அணிகளும் வெற்றியுடன் தொடரை முடிக்க மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்திய மகளிர் அணி vs ஆஸ்திரேலிய மகளிர் அணி
  • இடம் - பிரபோர்ன் மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7 மணி

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 29
  • இந்தியா - 7
  • ஆஸ்திரேலியா - 21
  • முடிவில்லை - 1

உத்தேச லெவன்

இந்திய மகளிர் அணி - ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், அஞ்சலி சர்வானி, ரேணுகா தாக்கூர் சிங், ராஜேஸ்வரி கயக்வாட்.

ஆஸ்திரேலியா மகளிர் அணி - ஃபோப் லிட்ச்ஃபீல்ட், பெத் மூனி, தஹிலா மெக்ராத் (கே), எலிஸ் பெர்ரி, ஆஷ்லீ கார்ட்னர், கிரேஸ் ஹாரிஸ், அனாபெல் சதர்லேண்ட், ஹீதர் கிரஹாம், அலனா கிங், மேகன் ஷட், டார்சி பிரவுன்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ரிச்சா கோஷ்
  • பேட்டர்ஸ் – பெத் மூனி, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர்
  • ஆல்-ரவுண்டர்கள் - எலிஸ் பெர்ரி, தீப்தி ஷர்மா, ஹீதர் கிரஹாம், ஆஷ்லே கார்ட்னர்
  • பந்துவீச்சாளர்கள் - மேகன் ஷட், ரேணுகா சிங் தாக்கூர், டார்சி பிரவுன்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை