வங்கதேச vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Fri, Dec 09 2022 21:42 IST
Image Source: Google

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில், வங்கதேச அணி கடைசிவரை போராடி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் தொடர்ச்சியாக 6 விக்கெட்களை இழந்தபோதும், அதன்பிறகு மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து வங்கதேச அணி 271 ரன்ளை குவித்து, இறுதியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்று, தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, தீபக் சஹார் ஆகியோர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் அவர்களுக்கு மாற்றாக வீரர்களை களமிறக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் -  வங்கதேசம் vs இந்தியா
  • இடம் - ஸஹுர் அஹ்மத் சௌத்ரி மைதானம், சட்டோகிராம்
  • நேரம் - பகல் 11.30 மணி

போட்டி முன்னோட்டம் 

ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைத் தழுவி ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ரோஹித் ஷர்மா, தீபக் சஹார் ஆகியோர் காயமடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளதால்ம் தற்போது அவர்களுக்கு மாற்றாக வீரர்களை களமிறக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.

அதன்படி கேப்டன் ரோஹித் சர்மா நாடு திரும்பியிருப்பதால், அவருக்கு மாற்றாக இஷான் கிஷன் களமிறங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தவன், கிஷன் இருவரும் இடது கை பேட்டர்கள் என்பதால், ஓபனர்களாக தவனுடன் கோலி களமிறங்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. கிஷன் சமீப காலமாகமே படுமோசமாக சொதப்பி வருகிறார். இந்த வாய்ப்பையும் அவர் தவறவிடும் பட்த்தில், அடுத்து ருதுராஜ் கெய்க்வாட்டிற்குத்தான் வாய்ப்பு கிடைக்கும். இதனால், மூன்றாவது போட்டியில் கிஷன் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இந்திய அணியில் ஷர்தூல் தாகூர், உம்ரான் மாலிக், முகமது சிராஜ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். குல்தீப் சென் காயம் காரணமாக முதல் போட்டியின்போதே விலகிவிட்டார். தற்போது தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் மட்டும் களமிறங்க வேண்டிய நிலையில் இந்திய அணி இருக்கிறது.

தீபக் சஹாருக்கு மாற்றாக ஷாபஸ் அகமது களமிறங்க உள்ளார். அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகிய ஸ்பின்னர்களுடன் இவர் பந்துவீச உள்ளார். அதாவது மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், மூன்று ஸ்பின்னர்களுடன் களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் ஷர்தூல் தாகூர், உம்ரான் மாலிக், சிராஜ் ஆகியோரில் ஒருவர் கூட டெத் பௌலர் இல்லை. குறிப்பாக, கடைசிக் கட்டத்தில் இவர்களில் ஒருவர் கூட யார்க்கர் வீசுவது கிடையாது. இதுதான், இந்திய அணியின் முக்கியமான பலவீனமாக இருக்கிறது.

அதேசமயம் லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி அடுத்தடுத்த போட்டிகளில் உலகின் முன்னணி அணிகளில் ஒன்றான இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் மெஹிதி ஹசன் மற்றும் பந்துவீச்சாளர்கள் தான்.

ஏனெனில் முதல் போட்டியில் கடைசி விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியைத் தேடிக்கொடுத்த மெஹிதி ஹசன், அடுத்த போட்டியில் சதமடித்து வலுவான இலக்கை நிர்ணயிக்க உதவினார். அதுமட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் அவ்வபோது விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அவரைத் தவிர்த்து ஷாகிப் அல் ஹசன், முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் பந்துவீச்சிலும் மஹ்முதுல்லா, லிட்டன் தாஸ் ஆகியோர் பேட்டிங்கிலும் அசத்தினால் நிச்சயம் இப்போட்டியிலும் வங்கதேச அணி வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை வங்கதேச அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் இந்திய அணியை முதல் முறையாக ஒயிட்வாஷ் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 38
  • இந்தியா - 30
  • வங்கதேசம் - 07
  • முடிவில்லை - 01

உத்தேச அணி

இந்தியா - இஷான் கிஷன், ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கே), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், ஷாபாஸ் அகமது, உம்ரான் மாலிக்

வங்கதேசம் - லிட்டன் தாஸ் (கே), அனாமுல் ஹக், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, அபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், எபாடோட் ஹொசைன்.

ஃபேண்டஸி லெவன்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை