இந்தியா vs நெதர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, Oct 26 2022 21:50 IST
India vs Netherlands, T20 World Cup, Super 12 - Cricket Match Prediction, Where To Watch, Probable 1 (Image Source: Google)

ஆஸ்திரேலியாவில் த்ரில்லர் திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2ஆவது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்து அசாத்தியமான வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்தது. 

குறிப்பாக கடைசி பந்தில் சிங்கிள் அடிக்க வேண்டும் என்ற சூழலில் ரவிச்சந்திரன் அஸ்வின் வெற்றிக்கான ரன்னை அடித்து த்ரில் வெற்றியை பெற்று தந்தார். கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்த அந்த போட்டியை அடுத்து இந்திய அணி தனது 2ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இளம் வீரர்களை கொண்ட அந்த அணி தகுதிச்சுற்றில் முன்னணி அணிகளுக்கே சவால் கொடுத்துவிட்டு, சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி சிட்னியில் உள்ள மைதானத்தில் நாளை மதியம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் இந்திய அணி, இந்த போட்டியிலும் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த சுற்றுக்கு செல்வது சற்று சுலபமாக இருக்கும். எனவே கத்துக்குட்டி அணியை வீழ்த்த ரோஹித் சர்மாவின் படை தயாராகி வருகிறது.

அதற்கேற்றது போல் இந்திய அணி விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருடன் ரோஹித், ராகுல், சூர்யகுமார் ஆகியோரும் பேட்டிங்கி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் இந்திய இமாலய இலக்கை நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.

அதேபோல் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோருடன் ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வினும் இருப்பது நிச்சயம் எதிரணி பேட்டர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும்.

ஆனால் நெதர்லாந்து அணியையும் எளிதாக எடுத்துகொள்ள முடியாது. ஏனெனில் கடந்த காலங்களில் இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளுக்கும் நெதர்லாந்து அணி அதிர்ச்சியளித்துள்ளது நினைவில் இருக்கலாம்.

அதேபோல் நடப்பு சீசனில் குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் அந்த அணி அடுதடுத்து வெற்றிகளைப் பெற்று சூப்பர் 12-இல் நுழைந்துள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் மேக்ஸ் ஓடவுட், விக்ரம்ஜித் சிங், பாஸ் டி லீட், 
டாம் கூப்பர் ஆகியோரையே முழுமையாக சார்ந்துள்ளதால் அவர்கள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் நெதர்லாந்திடம் இந்தியா தோற்கலாம் என வல்லுநர்கள் கூறியுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கு காரணம் இன்று இங்கிலாந்து அணி சந்தித்த மோசமான விஷயங்கள் தான். அயர்லாந்து அணியுடனான லீக் போட்டியில் மிகவும் பலமான இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது. இதற்கு காரணம் டக்வொர்த் லூயிஸ் முறை தான்.

இங்கிலாந்து அணியின் சேஸிங்கின் போது திடீரென மழை குறிக்கிட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் விதிமுறைப்படி 14.3 ஓவர்களில் 111 ரன்களை அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அந்த அணி தள்ளப்பட்டது. அவசர அவசரமாக ரன் வேகத்தை உயர்த்திய போதும், அந்த அணி விக்கெட்களை பறிகொடுத்தது. இதனால் குறிப்பிட்ட ஓவர்களில் 105 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதே போன்ற மழை பாதிப்பு நாளை இந்தியா அணியின் போட்டியிலும் வரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா -நெதர்லாந்து போட்டி நடைபெறும் சிட்னி நகரத்தில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நாளைய தினமும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனால் இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே ரன் ரேட்டை அதிகமாக வைத்திருக்கவில்லை என்றால் தோல்வியடையலாம் எனக்கூறப்படுகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs நெதர்லாந்து
  • இடம் - சிட்னி கிரிக்கெட் மைதானம்
  • நேரம் - மதியம் 12.30 மணி (இந்திய நேரப்படி)

நேருக்கு நேர்

இந்தியா: ரோஹித் சர்மா(கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், பாஸ் டி லீட், கொலின் அக்கர்மேன், டாம் கூப்பர், ஸ்காட் எட்வர்ட்ஸ்(கே), ரோலோஃப் வான் டெர் மெர்வே, டிம் பிரிங்கிள், டிம் வான் டெர் குக்டன், ஃபிரெட் கிளாசென், பால் வான் மீகெரென்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ஸ்காட் எட்வர்ட்ஸ்
  • பேட்டர்ஸ் - மேக்ஸ் ஓ டவுட், கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்
  • ஆல்ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, பாஸ் டி லீட்
  • பந்துவீச்சாளர்கள் - முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், டிம் பிரிங்கிள், புவனேஷ்வர் குமார்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை