இந்தியா vs நியூசிலாந்து, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Thu, Jan 26 2023 16:29 IST
India vs New Zealand, 1st T20I – IND vs NZ Cricket Match Preview, Prediction, Where To Watch, Probab (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொனட் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்ததுடன், ஐசிசி ஒருநாள் அணிகள் தரவரிசைப் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியது. 

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இந்திய அணி தொடர்ந்து 6 ஒருநாள் போட்டியில் விளையாடிய பிறகு தற்போது டி20 தொடரில் மீண்டும் களமிறங்குகிறது. இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா - நியூசிலாந்து
  • இடம் - ஜேஎஸ்சிஏ மைதானம், ராஞ்சி
  • நேரம் - இரவு 7 மணி

போட்டி முன்னோட்டம்

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் நீண்ட நாட்களுக்கு பிறகு அதிரடி வீரர் பிரித்வி ஷா சேர்க்கப்பட்டுள்ளார். அதற்கேற்றது போல் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளதால் பிரித்வி ஷாவுக்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

அதேசமயம் ஷுப்மன் கில், இஷன் கிஷான் ஆகியோரும் இருப்பதால் இவர்களில் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற சந்தேகம் நிலவிவருகிறது. மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா ஆகியோரும் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

அதேபோல் ராகுல் திரிபாதி, ஜித்தேஷ் சர்மா ஆகியோருக்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஆகியோருடன் ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் இருப்பதால் நிச்சயம் இந்த அணி கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி ஏற்கெனவே இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது மட்டுமில்லாமல், ஒயிட்வாஷ் ஆகி படு தோல்வியை சந்திந்தது. இதனால் டி20 தொடரைக் கைப்பற்றி அதற்கு பதிலடி கொடுக்கும் முனையில் இத்தொடரை எதிர்கொள்கிறது.

அந்த அணியின் பேட்டிங்கில் டெவான் கான்வே, ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், கிளென் பிலீப்ஸ், டேரில் மிட்செல் என அதிரடி பட்டாளமே நிறைந்துள்ளது அந்த அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் லோக்கி ஃபர்குசன், இஷ் சோதி, மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் இருப்பது நிச்சயம் இந்திய அணிக்கு சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 22
  • இந்தியா - 10
  • நியூசிலாந்து - 09
  • முடிவில்லை - 03

உத்தேச லெவன்

இந்தியா – ஷுப்மான் கில், பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (கே), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர்/குல்தீப் யாதவ், சிவம் மாவி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

நியூசிலாந்து - ஃபின் ஆலன், டெவான் கான்வே, மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், டேவ் கிளீவர், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கே), லாக்கி பெர்குசன், இஷ் சோதி, பிளேர் டிக்னர்.

உத்தேச லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - டெவான் கான்வே
  • பேட்டர்ஸ் – சூர்யகுமார் யாதவ், கிளென் பிலிப்ஸ், பிரித்வி ஷா
  • ஆல்ரவுண்டர்கள் - மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ஹர்திக் பாண்டியா
  • பந்துவீச்சாளர்கள் - லாக்கி பெர்குசன், இஷ் சோதி, அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்/உம்ரான் மாலிக்/குல்தீப் யாதவ்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை