இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, 5ஆவது டி20: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sun, Jun 19 2022 10:23 IST
India vs South Africa, 5th T20I – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியடைந்து 0-2 என பின்தங்கியிருந்த போதிலும் அதன் பின்னர் மீண்டெழுந்து அடுத்த இரு போட்டிகளிலும் பதிலடி கொடுத்து தொடரை 2-2 என்ற சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி ஆட்டம் பெங்களூருவில் இன்று இரவு நடைபெறுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - சின்னசுவாமி மைதானம், பெங்களூரு
  • நேரம் - இரவு 7 மணி

போட்டி முன்னோட்டம்

ராஜ்கோட், விசாகப்பட்டினத் தில் நடைபெற்ற கடைசி இரு ஆட்டங்களிலும் இந்திய அணி பந்து வீச்சில் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தியிருந்தது. வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், ஹர்ஷால் படேல் நெருக்கடி அளித்தனர். 4-வது ஆட்டத்தில் அவேஷ் கான் அற்புதமாக செயல்பட்டு 4 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தார்.

சுழற்பந்து வீச்சில் யுவேந்திர சாஹல், அக்சர் படேல் கூட்டணியும் சவால் அளித்து வருகிறது. மட்டை வீச்சில் கடந்த இரு ஆட்டத்திலும் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா அபாரமாக செயல்பட்டனர். 

அதேவேளையில் ஸ்ரேயஸ் ஐயர், கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோர் எளிதாக தங்களது விக்கெட்களை இழப்பது நடுவரிசை பேட்டிங்கை பலவீனப்படுத்துவதாக உள்ளது. தொடரை வெல்லக்கூடிய முக்கியமான ஆட்டம் என்பதால் இவர்கள் இருவரும் கூடுதல் பொறுப்புடன் செயல்பட முயற்சிக்கக்கூடும்.

அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமாவுக்கு இடது முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர், இன்று களமிறங்குவது சந்தேகம்தான். முதல் இரு ஆட்டங்களிலும் மட்டை வீச்சில் ஆக்ரோஷம் காட்டிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் கடைசி இரு ஆட்டங்களிலும் ஆடுகளத்துக்கு தகுந்தவாறு தங்களது யுக்திகளை மாற்றிக்கொள்ளத் தவறினர். ரபாடா காயம் காரணமாக வெளியேறி உள்ளதும் அந்த அணிக்குபின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 19
  • இந்தியா வெற்றி - 11
  • தென் ஆப்பிரிக்க வெற்றி - 8

உத்தேச அணி

இந்தியா - ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த்(கே), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான்.

தென் ஆப்பிரிக்கா - டெம்பா பவுமா (கே), குயின்டன் டி காக், டுவைன் பிரிட்டோரியஸ், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், அன்ரிச் நோர்ட்ஜே, லுங்கி இங்கிடி.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக், ஹென்ரிச் கிளாசென், தினேஷ் கார்த்திக்
  • பேட்டர்ஸ் - இஷான் கிஷன், டேவிட் மில்லர், ருதுராஜ் கெய்க்வாட்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, டுவைன் பிரிட்டோரியஸ்
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், லுங்கி இங்கிடி
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை