இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. 

Advertisement

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் மொஹாலியிலுள்ள பஞ்சாப் கிரிக்கெட் அசோஷியேசன் மைதானத்தில் நடைபெறுகிறது.

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs இலங்கை
  • இடம் - பஞ்சாப் கிரிக்கெட் அசோஷியேசன் மைதானம், மொஹாலி
  • நேரம் - காலை 9.30 மணி

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையில் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணி இத்தொடரில் களம் காணவுள்ளது. அதேசமயம் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு இது 100ஆவது டெஸ்ட் போட்டி என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் ஏகபோகத்திற்கு அதிகரித்துள்ளது.

மேலும் அணியின் மூத்த வீரர்களான ரஹானே, புஜாரா ஆகியோருக்கு இத்தொடரில் இடமளிக்காததால் 3 மற்றும் 5ஆம் இடத்திற்கான போட்டியில்  சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

பந்துவீச்சை பொறுத்தவரை அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரது கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. மேலும் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் வேகப்பந்துவீச்சில் அசத்துவார்கள் என்பதால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

திமுத் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணி கடைசியாக வெஸ்ட் இண்டீஸுடனான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

அணியின் மிடி ஆர்டரில் மேத்யூஸ், திரிமனே, டி சில்வா இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் சுரங்கா லக்மல், துஷ்மந்த சமீரா ஆகியோர் சிறப்பான ஃபார்மில் இருப்பதால் நிச்சயம் இந்திய அணிக்கு சற்று தலைவலியை ஏற்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் -
  • இந்தியா வெற்றி - 20
  • இலங்கை வெற்றி - 7
  • முடிவில்லை - 17

உத்தேச அணி

இந்தியா - ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஆர் அஷ்வின், ஜெயந்த் யாதவ்/குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி/ முகமது சிராஜ்

Advertisement

இலங்கை - திமுத் கருணாரத்னே (கே), பதும் நிஷங்கா, லஹிரு திரிமானே, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தினேஷ் சந்திமால், ஜெப்ரி வான்டர்சே, சுரங்க லக்மால், லசித் எம்புல்தெனிய, துஷ்மந்த சமீரா.

ஃபேண்டஸி கிரிக்கெட் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்
  • பேட்டர்ஸ் - விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், திமுத் கருணாரத்னே
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஏஞ்சலோ மேத்யூஸ்
  • பந்துவீச்சாளர்கள் - ஜெஃப்ரி வான்டர்சே, துஷ்மந்த சமீர, சுரங்க லக்மால்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News