SL vs IND, 2nd ODI: பிளேயிங் லெவனை மாற்றுமா இந்தியா?
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடித்தனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்கனெவே முதல் போட்டியில் இரு அணிகளும் வெற்றிகாக கடுமையாக போராடிய நிலையில் போட்டியில் டையில் முடிந்ததால், இத்தொடரானது தற்சமயம் சமநிலையில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தொடரில் முன்னிலை பெறுவதற்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிகான இரு அணிகளிலும் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
ஏனெனில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து கையில் இருந்த வெற்றியைக் கோட்டை விட்டுள்ளது. இதனால் நாளை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் நிகழ அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. அதன்படி நாளைய போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் செர்க்கபட அதிகவாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஒருவேளை ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்படும் பட்சத்தில் கேஎல் ராகுல் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்படலாம். அதேபோல் கொழும்பு மைதானம் அதிகளவில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால் ரியான் பராக் இடம் பிடிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளதாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்திய அணியில் இந்த மாற்றங்கள் செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
மறுபக்கம் இலங்கை அணியை பொறுத்தவரையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் போட்டியில் தோல்வியைத் தவிர்த்துள்ளது. இருப்பினும் அந்த அணி பேட்டிங்கில் முன்னேறுவது அவசியமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அந்த அணியின் முக்கிய மாற்றமாக நட்சத்திர வீரர் மகேஷ் தீக்ஷனா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளாது. ஒருவேளை அவர் அணியில் தேர்வாகும் பட்சத்திய ஜனித் லியானகே நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா உத்தேச பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல்/ரிஷப் பந்த், ஷிவம் துபே/ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இலங்கை உத்தேச பிளேயிங் லெவன்: பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா (கேப்டன்), துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, அகில தனஞ்சய், மகேஷ் தீக்ஷனா/ஜனித் லியனகே, முகமது ஷிராஸ், அசித ஃபெர்னாண்டோ.