இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடுகிறது. 

Advertisement

இதில் இரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. 

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை தர்மசாலாவில் நடைபெறுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs இலங்கை
  • இடம் - தர்மசாலா
  • நேரம் - இரவு 7 மணி

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்றது. 

Advertisement

அதிலும் குறிப்பாக இஷான் கிஷான், ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்திய அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

மேலும் பந்துவீச்சாளர்களில் புவ்னேஷ்வர் குமார் மீண்டும் தனது ஃபார்முக்கு திரும்பியுள்ளது பெரும் ஆறுதலை இந்திய அணிக்கு அளித்துள்ளது. அதேசமயம் நாளைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணி பேட்டிங், பந்துவீச்சி, பீல்டிங் என அனைத்து துறையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 

Advertisement

மேலும் அந்த அணியின் மாயாஜால சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனாவும் காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகியுள்ளது அந்த அணி பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 23
  • இந்தியா வெற்றி -15
  • இலங்கை வெற்றி - 7
  • முடிவில்லை - 1

உத்தேச அணி

Advertisement

இந்தியா - ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா/ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை - பதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, சரித் அசலங்க, தினேஷ் சந்திமால், ஜனித் லியனகே, தசுன் ஷனக (கே), சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, பிரவீன் ஜெயவிக்ரம, ஜெப்ரி வான்டர்சே, லஹிரு குமார.

ஃபேண்டஸி டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷன்
  • பேட்டர்ஸ் - ஸ்ரேயாஸ் ஐயர், சரித் அசலங்கா, ரோஹித் சர்மா/ருதுராஜ் கெய்க்வாட்
  • ஆல்-ரவுண்டர்கள் - வெங்கடேஷ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, தசுன் ஷனகா
  • பந்துவீச்சாளர்கள் - புன்வேஷ்வர் குமார், துஷ்மந்த சமீரா, யுஸ்வேந்திர சாஹல், லஹிரு குமார.
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News