India vs United Arab Emirates Match Prediction, Asia Cup 2025: டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

அந்தவகையில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்  பெற்றுள்ள இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வலிமை வாய்ந்ததாக பார்க்கப்படுவதால், அவர்களைச் சமாளித்து ஐக்கிய அரபு அமீரக் அணியால் வெற்றி பெற முடியுமா? அல்லது இந்திய அணி ஆதிக்கத்தை தொடருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

IND vs UAE: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம்
  • இடம் - துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
  • நேரம்- செப்டம்பர் 10, இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

Dubai International Cricket Stadium, Dubai Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 110 டி20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன, இதில் 51 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 58 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 139 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 212  ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

IND vs UAE T20 Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 01
  • இந்தியா- 01
  • யுஏஇ- 00
Advertisement

IND vs UAE, Asia Cup 2025: Where to Watch?

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம், அதேசமயம், சோனி லிவ் ஓடிடி தளத்தில் இத்தொடர் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

IND vs UAE, Asia Cup 2025: Player to Watch Out For

Advertisement

இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் அனைவரின் கண்களையும் ஈர்க்கும் நட்சத்திர வீரர்களாக இருக்கலாம். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியைப் பற்றிப் பேசினால், முகமது வாசிம், ஆசிப் கான் மற்றும் ஹைதர் அலி ஆகியோரால் சிறப்பாக செயல்பட முடியும்.

India vs United Arab Emirates Probable Playing XI

India Probable Playing XI: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், சுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.

Advertisement

United Arab Emirates Probable Playing XI: அலிஷன் ஷராபு, முஹம்மது வாசிம் (கேப்டன்), ஜோயிப் கான், ஆசிப் கான், ராகுல் சோப்ரா, ஹர்ஷித் கௌஷிக், ஹைதர் அலி, முஹம்மது ஃபரூக், முஹம்மது ரோஹித் கான், ஜுனைத் சித்திக், சிம்ரன்ஜீத் சிங்.

India vs United Arab Emirates Today's Match Prediction

2025 ஆசிய கோப்பையின் இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்புள்ள அணியாக இருக்கும்.

Also Read: LIVE Cricket Score
Advertisement

IND vs UAE Match Prediction, IND vs UAE Pitch Report, IND vs UAE Predicted XIs, Asia Cup 2025, Today's Match IND vs UAE, IND vs UAE Prediction, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, Pitch Report, India vs United Arab Emirates

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News