IND vs WI, 1sd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!

Updated: Fri, Feb 04 2022 14:17 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது.

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நாளை மறுநாள் (பிப்.6) நடைபெறவுள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்
  • நேரம் - மதியம் 1.30 மணி

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி நாளைய போட்டியில் களமிறங்குகிறது. மேலும் இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், நவ்தீப் சைனி, அக்ஸர் படேல் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


இதன் காரணமாக மயங்க் அகர்வால் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இப்போட்டியில் தொடக்க வீரர்களாக ரோஹித் - மயங்க் இணையே களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் கிட்டத்திட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக இல்லாமல் விராட் கோலி சாதாரண வீரராக இப்போட்டியில் விளையாடவுள்ளார். அதேசமயம் மிடி ஆர்டரில் சூர்யகுமார், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், இஷான் கிஷான் ஆகியோர் இருப்பது அணிக்கு கூடுதல் வலிமையாக பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சில் சஹால், தீபக் சஹார், ரவி பிஸ்னோய், வாஷிங்டன் சுந்தர், பிரஷித் கிருஷ்ணா ஆகியோரும் சிறப்பான ஃபார்மில் இருப்பதால் நிச்சயம் எதிரணிக்கு இவர்கள் சவால் விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கீரன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி சமீப காலங்களில் ஒருநாள் போட்டிகள் பெரிதளவில் சோபிக்கவில்லை. 

ஆனாலும் அந்த அணியில் ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், டேரன் பிராவோ, ஜேசன் ஹோல்டர் என பல நட்சத்திர வீரர்கள் இருப்பது அணியின் பேட்டிங் ஆர்டரை வலிமைப்படுத்துகிறது. 

பந்துவீச்சில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கீமார் ரோச் மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதேபோல் அகீல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப் ஆகியோரும் இருப்பது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 133
  • இந்தியா வெற்றி - 64
  • வெஸ்ட் இண்டீஸ் வெற்றி - 63
  • டிரா - 2
  • முடிவில்லை - 4

உத்தேச அணி
இந்தியா -
ரோஹித் சர்மா (கே), மயங்க் அகர்வால், விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர், தீபக் ஹூடா, தீபக் சஹார், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சஹால், பிரசித் கிருஷ்ணா.

வெஸ்ட் இண்டீஸ் - ஷாய் ஹோப், டேரன் பிராவோ, நிக்கோலஸ் பூரன், ஷமர் ப்ரூக்ஸ், ஃபேபியன் ஆலன், கீரன் பொல்லார்ட் (கே), ஜேசன் ஹோல்டர், அகீல் ஹோசைன், அல்ஸாரி ஜோசப்/ ஹேடன் வால்ஷ், கீமார் ரோச், ரொமாரியோ ஷெஃப்பர்ட்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ரிஷப் பந்த், நிக்கோலஸ் பூரன், ஷாய் ஹோப்
  • பேட்டர்ஸ் - சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரோஹித் சர்மா
  • ஆல்-ரவுண்டர்கள் - ஜேசன் ஹோல்டர், கீரன் பொல்லார்ட்
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சஹால், தீபக் சஹார், அகீல் ஹொசைன்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை