India vs West Indies, 1st T20I – போட்டி முன்னோடம் & ஃபேண்டஸி லெவன்

Updated: Mon, Feb 14 2022 16:14 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடிவருகிறது.

இதில் அகமதாபாத்தில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் வரும் 16ஆம் தேதிமுதல் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
  • நேரம் - இரவு 7 மணி

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் ஒருநாள் தொடரிலேயே இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. அதே உத்வேகத்துடன் டி20 தொடரிலும் இந்திய அணி செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் காயம் காரணமாக இந்திய அணியின் கேஎல் ராகுல், அஸ்சர் படேல் ஆகியோர் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

இருப்பினும் அவர்களுக்கு மற்றாக ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூட இடம்பெற்றிருப்பது சற்று பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெஸ்ட் இண்டீஸை பொறுத்தவரையில் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் ஜாம்பவான் அணியாக திகழ்ந்துவருகிறது. ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்துள்ள அந்த அணி டி20 தொடரில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கேற்றார் போல் பிரண்டன் கிங், நிக்கோலஸ் பூரன், ஓடியன் ஸ்மித், கீரன் பொல்லார்ட், ரோவ்மன் பாவல் என அதிரடி வீரர்கள் இருப்பது நிச்சயம் இந்திய பந்துவீசாளர்களுக்கு தலைவலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 17
  • இந்தியா வெற்றி - 10
  • வெஸ்ட் இண்டீஸ் வெற்றி - 6
  • முடிவில்லை - 1

உத்தேச அணி

இந்தியா - ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், தீபக் சாஹர்/ ஷர்துல் தாக்கூர், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல்.

வெஸ்ட் இண்டீஸ் - பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன், ரோவ்மேன் பவல், ஜேசன் ஹோல்டர், கீரன் பொல்லார்ட் (கே), ஃபேபியன் ஆலன், ரொமாரியோ ஷெப்பர்ட், ஒடியன் ஸ்மித், அகீல் ஹொசைன், ஷெல்டன் காட்ரெல்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷன், நிக்கோலஸ் பூரன்
  • பேட்டர்ஸ் - சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா, ரோவ்மன் பவல்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட்
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், அகீல் ஹொசைன்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை