இந்தியா மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Wed, Feb 15 2023 12:29 IST
India vs West Indies, Women's T20 World Cup 9th Match – INDW vs WIW Cricket Match Preview, Predictio (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா தனது 2ஆவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை இன்று எதிர்கொள்கிறது. 

இவ்விரு அணிகளில் இந்தியா, முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய உத்வேகத்துடன் வர, வெஸ்ட் இண்டீஸ் அணியோ இங்கிலாந்திடம் கண்ட தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் இருக்கிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டிஸ் மகளிர்
  • இடம் - நியூலேண்ட்ஸ், கேப்டவுன்
  • நேரம் - மாலை 6.30 மணி

போட்டி முன்னோட்டம்

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியைப் பொறுத்தவரை, கடந்த ஆட்டத்தை சிறப்பாகவே கையாண்டது. பேட்டா்கள் நல்லதொரு சேஸிங் இன்னிங்ஸை ஆடினா். காயம் காரணமாக அதில் பங்கேற்காத ஸ்மிருதி மந்தனா இந்த ஆட்டத்தில் கலந்துகொண்டு அணிக்கு மேலும் பலம் சோ்ப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் இன்னிங்ஸில் முதலில் அந்த அணியை கட்டுப்படுத்திய இந்திய பௌலா்கள், கடைசி கட்டத்தில் ரன்களை வழங்கினா். இந்த ஆட்டத்தில் அதைச் சரி செய்யும் திட்டத்துடன் அவா்கள் களம் காண்பாா்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொருத்தவரை இந்த ஆட்டத்தில் தோற்கும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேற நேரிடும் என்பதால், அந்த அணி வெல்வதற்காக கடுமையாகப் போராடும் என எதிா்பாா்க்கலாம்.

அந்த அணியின் பேட்டிங்கில் ஹெலி மேத்யூஸ், ரஷாதா வில்லியம்ஸ், ஸ்டஃபானி டெய்லர் ஆகியோரும் பந்துவீச்சில் ஸைடா ஜேம்ஸ், ஷகெரா செல்மான், அஃபி ஃபிளெட்சர் ஷமிலியா கானெல் ஆகியோர் இருப்பது அணிக்கு பலம் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 20
  • இந்தியா - 12
  • வெஸ்ட் இண்டீஸ் - 08

உத்தேச அணி

இந்தியா – ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், ராஜேஸ்வரி கயக்வாட், ரேணுகா தாக்கூர் சிங்.

வெஸ்ட் இண்டீஸ் - ஹேலி மேத்யூஸ் (கே), ரஷாதா வில்லியம்ஸ், ஷெமைன் காம்பெல்லே, ஸ்டாஃபனி டெய்லர், ஷபிகா கஜ்னபி, சினெல்லே ஹென்றி, செடியன் நேஷன், ஜைடா ஜேம்ஸ், அஃபி ஃபிளெட்சர், ஷமிலியா கானல், ஷகேரா செல்மன்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ரிச்சா கோஷ், ஷெமைன் கேம்ப்பெல்
  • பேட்டர்ஸ் - ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், செடியன் நேஷன்
  • ஆல்-ரவுண்டர்கள் - தீப்தி சர்மா, சினெல்லே ஹென்றி, ஹேலி மேத்யூஸ்
  • பந்து வீச்சாளர்கள் - ரேணுகா சிங், ராதா யாதவ், அஃபி ஃபிளெட்சர்

கேப்டன்/ துணைக்கேப்டன் தேர்வு - ரிச்சா கோஷ், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை