INDW vs AUSW, Only Test: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது!

Updated: Mon, Dec 25 2023 10:47 IST
INDW vs AUSW, Only Test: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது! (Image Source: Google)

இங்கிலாந்துக்கு எதிராக கடந்த வாரம் நடைபெற்ற ஒரே டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், பலம் வாய்ந்த ஒருநாள் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டம் மும்பையில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரெலிய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக தாஹிலா மெக்ராத் 50, பெத் முனி 40 ரன்களை சோ்த்தனா். இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்த்ரேகா் 4 விக்கெட்டுகளையும், ஸ்னே ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 406 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்மிருதி மந்தனா 74, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 73, தீப்தி சா்மா 78, ரிச்சா கோஷ் 52 ரன்களை விளாசினா். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆஷ்லே காா்ட்னா் 4 விக்கெட்டுகளை சாய்த்தாா். இதனால் இந்திய மகளிர் அணி 187 ரன்களுடன் முன்னிலை வகித்தது.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஹா்மன்ப்ரீத் கவுரின் அற்புத பந்துவீச்சில் நட்சத்திர பேட்டா்கள் தாஹிலா, இயான் ஹீலி ஆகியோரின் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 40 ரன்கள் முன்னிலையுடன் நான்காம் நாள் ஆட்டத்தை ஆஸி பேட்டா்கள் சதா்லேண்ட், காா்டனா் தொடா்ந்தனா்.

ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் முழு ஆதிக்கம் செலுத்திய நிலையில், இறுதி வரிசை பேட்டா்கள் தங்கள் விக்கெட்டுகளை எளிதாக பறிகொடுத்து திரும்பினா். அதன்படி அன்னபெல் சதா்லேண்ட் 27, காா்டனா் 7, ஜோனஸ்ஸன் 9, அலனா கிங் 0, கிம் காா்த் 4 என சொற்ப ரன்களுடன் வெளியேறியதால் 261 ரன்களுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 

இந்திய ஆணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்நே ராணா 4, கெய்க்வாட் 2, ஹா்மன்ப்ரீத் கவுர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா். பின்னர் 75 ரன்கள் வெற்றி இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா தொடங்கியது. தொடக்க வீராங்கனை ஃஷபாலி வா்மா 4, ரிச்சா கோஷ் 13 ரன்களுடன் வெளியேற, பின்னர் இணைந்த ஸ்மிருதி மந்தனா 38, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 12 ஆகியோா் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனா்.

இதன்மூலம் இந்திய மகளிர் அணி 18.4 ஓவா்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்தி தனது முதல்வெற்றியைப் பதிவு செய்தது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு உதவிய ஸ்நே ராணா ஆட்டநாயகி விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை