இந்தியா vs ஆஸ்திரேலியா, மகளிர் இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!

Updated: Tue, Sep 16 2025 19:55 IST
Image Source: Cricketnmore

India Women vs Australia Women 2nd ODI Match Prediction: எதிர்வரும் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், இந்திய மகளிர், ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யதவீந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும். இந்திய அணி தொடரில் நீடிக்க கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

IN-W vs AU-W 2nd ODI: போட்டி தகவல்கள்

மோதும் அணிகள்: இந்தியா மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர்
இடம்: மகாராஜா யதவீந்திர சிங் கிரிக்கெட், சண்டிகர்
நேரம் - இந்திய நேரப்படி மதியம் 1 மணி

Maharaja Yadavindra Singh International Cricket Stadium, Mullanpur Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி சண்டிகரில் உள்ள மகாராஜா யதவீந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. இருப்பினும் இது பேட்டர்களுக்கு சாதகமான மைதானங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

IN-W vs AU-W ODI Head To Head Record

Total Matches: 57
India Women: 10
Australia Women: 47
No Result/Tied: 0

IN-W vs AU-W 2nd ODI : Where to Watch?

இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வர்க்கில் நேரலையில் காண முடியும். ஆன்லைனின் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ - ஹாட்ஸ்டாரில் இந்த தொடரை காண முடியும்,

IN-W vs AU-W 2nd ODI: Player to Watch Out For

இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்மன்ப்ரீத் கவுர், ரிச்சா கோஷ் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கலாம். ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரையில் அலிசா ஹீலி, ஆலிஸ் பெர்ரி, அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்லே கார்ட்னர் மற்றும் அலகா கிங் ஆகியோர் தங்கள் செயல்திறனால் போட்டியை மற்ற முடியும். 

India Women vs Australia Women 2nd ODI Probable Playing XI

India Women 2nd ODI Probable Playing XI:பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ராதா யாதவ், தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், கிராந்தி கௌர், ஸ்ரீ சரணி

Australia Women 2nd ODI Probable Playing XI: ஃபோப் லிட்ச்ஃபீல்ட், அலிசா ஹீலி (கேப்டன்), எலிஸ் பெர்ரி, பெத் மூனி, அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்lலே கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், ஜார்ஜியா வேர்ஹாம், அலானா கிங், கிம் கார்த், மேகன் ஸ்கட

India Women vs Australia Women Today's Match Prediction

இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி வலிமையானதாக பார்க்கப்படுவதால், இந்த போட்டியிலும் அதனை தொடர வாய்ப்புள்ளது.

Also Read: LIVE Cricket Score

IN-W vs AU-W 2nd ODI Match Prediction, IN-W vs AU-W Pitch Report, Today's Match IN-W vs AU-W, IN-W vs AU-W Prediction, IN-W vs AU-W Predicted XIs, Cricket Tips, IN-W vs AU-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, Pitch Report, Injury Update of the match between India Women vs Australia Women

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை