இந்திய அணிக்கு பேட்டிங் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது - ஆகாஷ் சோப்ரா!

Updated: Mon, Jun 05 2023 22:46 IST
Indian batters haven't conquered English conditions in recent times, says Aakash Chopra! (Image Source: Google)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் வருகிற ஏழாம் தேதி முதல் 11ம் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் மோதுகின்றன. இதற்காக இரு அணிகளும் கடந்த ஒரு வாரமாக தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி வென்று சாம்பியன் பட்டத்தை பெரும், 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பைகள் இல்லாத குறையை தீர்க்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகவே ரசிகர்கள் மத்தியிலும் பிசிசிஐ தரப்பிலும் நிலவு வருகிறது.

இன்னிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் குறித்த பல்வேறு கணிப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பிடத்தக்கவிதமாக யார் யார் இந்திய அணிக்கும் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கும் திருப்புமுனையாக இருப்பார்கள்? எந்த அணி கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றது? மற்றும் இரு அணிகளுக்கும் என்னென்ன பிரச்சனை இருக்கிறது? ஆகியவை குறித்த கணிப்புகள் வெளி வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியில் இருக்கும் பிரச்சனை என்ன? பேட்டிங் பவுலிங் எப்படியுள்ளது? என்பது குறித்து தனது கருத்தை முன்வைத்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.

அதில், “இந்திய அணி சமீப காலமாக சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. குறிப்பாக இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் டெஸ்ட் போட்டிகளில் புதிய உச்சம் தொட்டிருக்கின்றனர். வேகப்பந்து வீச்சில் இந்திய அணி செயல்பட்டு வரும் விதம் வெளிநாடு மைதானங்களில் எளிதாக போட்டிகளை வெல்வதற்கு உதவுகிறது. ஆகையால் இங்கிலாந்து கண்டிஷனிலும் இந்த இந்திய அணியின் வேகப்பந்து விச்சாளர்கள் ஆஸ்திரேலியாவை எளிதாக கட்டுப்படுத்துவார்கள் என தெரிகிறது. ஆகையால் பந்துவீச்சில் எந்தவித பின்னடைவும் இல்லை.

விராட் கோலி முன்பு சரியான ஃபார்மில் இல்லாதபோது, ரோஹித் சர்மா மற்றும் புஜாரா இருவரின் பேட்டிங் உதவி வந்தது. ஆனால் இருவரும் சமீபகாலமாக எதிர்பார்த்த ஃபார்மில் இல்லை. புஜாரா கவுண்டி போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு நிகரான பந்துவீச்சை அவர் எதிர்கொள்ளவில்லை. ஆகையால் அந்த இடத்திலும் பின்னடைவாக இருக்கின்றது இந்திய அணி.

இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணிக்கு பேட்டிங் சற்று பின்னடைவை தருகிறது. டாப் ஆர்டரில் நல்ல ஃபார்மில் இருந்து வந்தாலும் இங்கிலாந்தில் அவர் போதிய அளவில் விளையாடாததால் அவரை நம்பி களமிறங்க முடியாது. மிடில் ஆர்டரில் மற்ற வீரர்களும் பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பை கொடுக்கும் பட்சத்தில் இந்திய அணி பேலன்ஸ் ஆக இருக்கும். இல்லையெனில் பேட்டிங் பிரச்சினையாக முடியும்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை