டி20 உலகக்கோப்பை: இந்திய வீரர்களுக்கு உணவில் குறை வைக்கும் ஐசிசி; கடுமையாக சாடும் ரசிகர்கள்!

Updated: Wed, Oct 26 2022 11:02 IST
Image Source: Google

ஐசிசிக்கு கிடைக்கும் வருமானத்திற்கு முக்கிய காரணமே இந்திய கிரிக்கெட் அணி தான். ஆனால் இந்திய வீரர்களுக்கு போதுமான ஏற்பாடுகளை ஐசிசி செய்யவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு, இந்திய அணி அடுத்த போட்டியில் நெதர்லாந்துடன் மோதுவதற்காக சிட்னி வந்துள்ளது. சிட்னியில் நேற்று பயிற்சி முகாமில், விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்கேற்றனர்.

இந்த தொடரை ஐசிசி நடத்துவதால், ஹோட்டல் அறைகள் முதல் போக்குவரத்து வரை அனைத்து ஏற்பாடுகளையும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் தான் மேற்கொள்ளும். இந்திய அணி உள்ளிட்ட தொடரில் பங்கேற்கும் 16 அணிகளை சேர்ந்த வீரர்களுக்கு உணவு, தண்ணீர் என அனைத்தையும் ஐசிசி தான் செய்ய வேண்டும்.

இந்த நிலையில், நேற்று பயிற்சி முடிவடைந்து அறைக்கு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு உணவாக வெறும் சாண்ட்விச்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன. அதுவும் அந்த சாண்ட்விச்கள் கூலாகவும், வாயில் வைக்க முடியாத அளவுக்கு இருந்ததாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இந்திய அணி நிர்வாகம், ஐசிசியிடம் புகாரை பதிவு செய்துள்ளது.

இது போன்று உணவில் குறை வைத்தால் வீரர்களால் எப்படி டி20 போட்டியில் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியும். இந்த தவறு வேண்டும் என்றே செய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்று ரசிகர்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

பல ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி தொடரில் இப்படி உணவு பிரச்சினையை இந்திய வீரர்கள் சந்தித்துள்ளனர். உலகம் போற்றும் வீரர்களை இப்படியா நடத்துவது என்று ரசிகர்களும் கடுப்பாகி உள்ளனர். இந்த புகார் குறித்து பிசிசிஐயும் ஐசிசி நிர்வாகிகளை கடுமையாக சாடியுள்ளது. இதனையடுத்து உணவு பிரச்சினையை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஐசிசி மன்னிப்பு கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை