தனியார் தொலைக்காட்சியின் ஸ்டிங் ஆப்ரேஷனால் சர்ச்சையில் சிக்கிய சேத்தன் ஷர்மா; திடுக்கிடும் தகவல்களால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Updated: Wed, Feb 15 2023 10:01 IST
Image Source: Google

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தபோது, சேத்தன் ஷர்மா தான் தேர்வுக்குழு தலைவராக செயல்பட்டு வந்தார். அப்போது விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க கங்குலி, சேத்தன் ஷர்மாவுக்குத்தான் பெரும் பங்கு இருந்ததாக கருதப்பட்டது. பலரும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், எங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என திட்டவட்டமாக இருவரும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அணித் தேர்வில் இருந்த அதிருப்தி காரணமாக சேத்தன் ஷர்மாவின் பதவி பறிக்கப்பட்டது. கங்குலியும் பசிசிஐ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது ரோஜர் பின்னி தான் பிசிசிஐ தலைவராக இருக்கிறார். இந்நிலையில், மீண்டும் சேத்தன் ஷர்மாவுக்கு தேர்வுக்குழு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரோஜர் பின்னி தங்கியிருந்த இடத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று ரகசிய கேமரா வைத்து கண்காணித்தது. அப்போது, ஒரு நபரிடம் சேத்தன் ஷர்மா பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியது பதிவாகியுள்ளது. இதில், கங்குலி விராட் கோலி இடையே மோதல் ஏற்பட்டது குறித்து சேத்தன் ஷர்மா பேசியுள்ளார்.

முதலில் பேசிய சேத்தன் ஷர்மா, ‘கங்குலியுன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே விராட் கோலி கேப்டன் பதவியல் இருந்து நீக்கப்பட்ட்டாகவும், கோலி சில போட்டிகளில் சொதப்பியபோதே உடனே இந்த முடிவினை எடுத்துவிட்டோம்’ எனக் கூறினார்.

மேலும், ‘கிரிக்கெட்டை விட நான்தான் பெரிய ஆள் என கோலி நினைத்துக் கொண்டிருந்தார். டி20 கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகியபோது கங்குலி அவரை வீடியோ கான்பிரன்சில் தொடர்புகொண்டு ஒரு மீட்டிங் நடத்தினார். அதில், நாங்கள் ஒரு எட்டு பேர் பங்கேற்றோம். அப்போது, கேப்டன் பதவியை விட்டு செல்ல வேண்டாம் என கங்குலி கூறினார். ஆனால், அதனை கோலி கேட்கவே இல்லை’ எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், ‘விராட் கோலி டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகியப் பிறகு, ஒருநாள், டி20 அணிகளுக்கு தனித்தனி கேப்டன்கள் இருப்பது நல்லது கிடையாது என்பதால்தான் கோலியை ஒருநாள் கேப்டன் பதவியல் இருந்தும் நீக்கினோம். விராட் கோலியை பிடிக்காத காரணத்தினாலேயே ரோஹித் ஷர்மாவுக்கு கங்குலி கேப்டன் பதவியை கொடுத்தார்’ என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ‘குணமடையாத சில வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்புவதற்காக ஸ்டெராய்டு ஊசியை செலுத்திக் கொண்டு உடல் தகுதியை எட்டி அணிக்குள் நுழைந்து வருகிறார்கள். இதனை, மருத்துவ குழுவினராலும் கண்டுபிடிக்க முடியவில்லை’ எனத் தெரிவித்தார்.

இப்படி சேத்தன் ஷர்மா வெளிப்படையாக பேசி சிக்கியிருப்பது, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சேத்தன் ஷர்மாவை பிசிசிஐ உடனே பணிநீக்கம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை