IND vs SL: இலங்கை தொடரில் அறிமுகமாக காத்திருக்கும் வீரர்கள்!

Updated: Mon, Jan 02 2023 12:22 IST
Image Source: Google

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நாளை ஜனவரி 3ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த  தொடரில் ஒருசில இந்திய வீரர்கள் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது .

இதில் முதன்மை வீரராக ஷுப்மன் கில் உள்ளார். இந்திய அணிக்காக இதுவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் ஷுப்மன் கில் நாளை தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் விளையாடுவார் என உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இஷான் கிஷானுடன் அவர் தொடக்க வீரராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் 31 வயதான ராகுல் திருப்பாதி 76 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1,798 ரன்கள் விளாசி இருக்கிறார். சன்ரைசர்ஸ் அணிக்காக கடந்த சீசனில் ராகுல் திருப்பாதி 413 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரெட் 150 தாண்டி இருக்கிறது. ராகுல் திருப்பாதியை தொடக்க வீரர் அல்லது நடுவரசை என ஹர்திக் பாண்டியா எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

இந்தப் பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் சிவம் மவியும் இடம்பிடித்துள்ளார். அண்டர் 19 கிரிக்கெட் வீரராக அறிமுகமாகி அதிவேகமாக பந்துவீசி அனைவரும் கவனத்தையும் ஈர்த்தவர். காயம் காரணமாக சில காலம் கிரிக்கெட்டில் களமிறங்காத சிவம் மவி கடந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ஏழு போட்டியில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் சிவம் மவிக்கு இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமாக அதிக வாய்ப்பு உள்ளது.

இதேபோன்று கடந்த ஆண்டு உள்ளூர் கிரிக்கெட்டில் கலக்கிய முகேஷ் குமாரும் இலங்கைக்கு எதிரான டி20 அணியில் இடம் பெற்று இருக்கிறார். கடந்த ரஞ்சி கோப்பையில் ஐந்து போட்டிகளில் விளையாடி 20 வீக்கெட்டுகளை முகேஷ் குமார் வீழ்த்தி இருக்கிறார். அதேபோன்று இந்திய ஏ அணி தொடரில் களம் இறங்கி முகேஷ் குமார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார். 

மேலும் முகேஷ் குமார் ஐபிஎல் மினி நிலத்தில் 5.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் இருந்தது அவருடைய திறமைக்கு எடுத்துக்காட்டாக பார்க்கலாம். இதனால் இலங்கை அணியுடனான தொடரில் இவர்கள் அறிமுக வீரர்களாக களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இதில் யார் யார் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார்கள் என்பது நாளையே தெரியவரும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை