சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு!

Updated: Tue, Aug 27 2024 21:04 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக செயல்பட்டு வந்த நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே, ஐசிசி ஒளிபரப்பு உரிமையாளருடனான கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்ட அவர் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன், மூன்றாவது முறையாக அப்பதியில் நீடிக்க விரும்பவில்லை என்றும் கூறினார். 

இதனையடுத்து ஐசிசியின் புதிய தலைவர் பதவிக்கான விண்ணப்பங்களை ஐசிசி நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 27) இப்பதிவிக்கு போட்டியிடும் நபர்கள் தங்கள் வேட்புமனுக்களை முன்வைக்க வேண்டும் என்று ஐசிசி தரப்பில் கூறப்பட்டிருந்த்து. ஆனால் இந்த பதவிக்குக்கு பிசிசிஐ செயலாளராக செயல்பட்டு வரும் ஜெய் ஷாவை தவிர்த்து வேறு யாரும் விண்ணபிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமக ஐசிசியின் புதிய தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஜெய் ஷா ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வரலாற்றில் மிக இளம் வயதில் தலைவராக நியமிக்கப்பட்ட நபர் எனும் பெருமையையும் ஜெய் ஷா பெற்றுள்ளார்.  இந்நிலையில் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறித்து பேசியுள்ள ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம் நான் மிகவும் தாழ்மையடைந்தவனாக கருதுகிறேன். கிரிக்கெட்டை மேலும் உலகமயமாக்க ஐசிசி மற்றும் எங்கள் உறுப்பு நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்ற நான் உறுதிபூண்டுள்ளேன்.

பல வடிவங்களின் அனைத்து அணிகளையும் சமநிலைப்படுத்துவதும், மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதும், புதிய உலகளாவிய சந்தைகளுக்கு எங்கள் மார்க்கீ நிகழ்வுகளை அறிமுகப்படுத்துவதிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கியமான கட்டத்தில் நாங்கள் நிற்கிறோம். முன்னெப்போதையும் விட கிரிக்கெட்டை மிகவும் பிரபலமாக்குவதே எங்கள் குறிக்கோளாக கொண்டுள்ளேன். 

Also Read: Funding To Save Test Cricket

நாம் கற்றுக்கொண்ட மதிப்புமிக்க பாடங்களை உருவாக்கும்போது, ​​உலகளவில் கிரிக்கெட் மீதான அன்பை உயர்த்த புதிய சிந்தனை மற்றும் புதுமைகளை நாம் தழுவ வேண்டும். எதிர்வரும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது இந்த விளையாட்டின் வளர்ச்சிக்கான குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலிக்கிறது, மேலும் இது முன்னெப்போதும் இல்லாத வகையில் விளையாட்டை முன்னெடுத்துச் செல்லும் என்று நான் நம்புகிறேன்” என்ரு தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை