Greg barclay
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக செயல்பட்டு வந்த நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே, ஐசிசி ஒளிபரப்பு உரிமையாளருடனான கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்ட அவர் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன், மூன்றாவது முறையாக அப்பதியில் நீடிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.
இதனையடுத்து ஐசிசியின் புதிய தலைவர் பதவிக்கான விண்ணப்பங்களை ஐசிசி நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 27) இப்பதிவிக்கு போட்டியிடும் நபர்கள் தங்கள் வேட்புமனுக்களை முன்வைக்க வேண்டும் என்று ஐசிசி தரப்பில் கூறப்பட்டிருந்த்து. ஆனால் இந்த பதவிக்குக்கு பிசிசிஐ செயலாளராக செயல்பட்டு வரும் ஜெய் ஷாவை தவிர்த்து வேறு யாரும் விண்ணபிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமக ஐசிசியின் புதிய தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஜெய் ஷா ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Greg barclay
-
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகும் ஜெய் ஷா?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெலியாகியுள்ளன. ...
-
மிக்கி ஆர்த்தரின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த ஐசிசி தலைவர்!
நாங்கள் நடத்தும் ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும், பல்வேறு தரப்புகளில் இருந்து இப்படியான பேச்சுகள் வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது என மிக்கி ஆர்த்தர் கருத்துக்கு ஐசிசி தலைவர் கிரேக் பார்க்லே பதிலடி கொடுத்துள்ளார். ...
-
ஐசிசியின் தலைவராக மீண்டும் தேர்வானார் கிரேக் பார்கிளே - தகவல்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக கிரேக் பார்கிளே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
லார்ட்ஸில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி!
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், வீரர்கள், முன்னாள் வீரர்கள் ஆகியோரை பாரபட்சமின்றி இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24