100ஆவது டெஸ்டில் விளையாடும் அஸ்வினுக்கு பிசிசிஐ மரியாதை!

Updated: Thu, Mar 07 2024 12:59 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்கி நடைபெற்று. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் விளையாடும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தனது 100ஆவது சர்வதேச டெஸ்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் இந்திய அணி சார்பாக 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 14ஆவது வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த பெருமையை பெற்றுள்ளார்.

இந்நிலையில் தனது 100ஆவது போட்டியில் விளையாடும் அஸ்வினுக்கு, இந்திய அணி சார்பாக அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் பிசிசிஐ சார்பாக மரியாதை அளிக்கப்பட்டது. அவருக்கு நூறாவது டெஸ்ட் போட்டிக்கான பிரத்யேகமான தொப்பியினை இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் அவரது மனைவி பிரீத்தி மற்றும் அவரது இரண்டு மகள்களும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பரிசளிப்பு விழாவிற்கு பிறகு தனது குடும்பத்தாருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட அஸ்வின் மைதானத்திற்கு களமிறங்குவதற்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் செய்த மரியாதை நெகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது. அந்த வகையில் இந்திய அணியின் ரோஹித் சர்மா கேட்டுக் கொண்டதுக்கு இணங்க அணி வீரர்கள் இருபுறமும் அரணமைத்து அஸ்வினுக்கு ‘கார்ட் ஆஃப் ஹானர்’ மரியாதை செய்தனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்திய அணிக்காக இதுவரை இந்திய அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் 5 சதங்கள், 14 அரைசதங்கள் என 3,309 ரன்களையும், 507 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக இதில் 35 முறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை