Advertisement

தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மாற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இந்திய மகளிர் அபார வெற்றியைப் பதிவுசெய்து தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூனறாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று நடைபெற்றது.

Advertisement

சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு வழக்கம் போல் கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடி வந்த லாரா வோல்வார்ட் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மரிஸான் கேப்பும் 10 ரன்களுக்கும், தஸ்மின் பிரிட்ஸ் 20 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிதனர்.

அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அன்னேக் போஷ் 17 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து அற்ற வீராங்கனைகள் அனைவரும் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடைடைக் கட்டினர். இதனால் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பூஜா வஸ்திரேகர் 4 விக்கெட்டுகளையும், ராதா யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 54 ரன்களையும், ஷஃபாலி வர்மா 27 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 10.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை விழ்த்தியதுடன் 1-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News