என்சிஏ பயிற்சியில் ரோஹித், ஜடேஜா!

Updated: Fri, Dec 17 2021 14:11 IST
Image Source: Google

இந்தியா அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. 

இத்தொடருக்கான இந்திய அணியும் நேற்று தனி விமானம் மூலம் தென் ஆப்பிரிக்கா சென்றடைந்தது. இந்நிலையில் காயம் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இத்தொடரில் விளையாடவில்லை. 

மேலும் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ரோஹித் நியமிக்கப்பட்டுள்ள சமயத்தில் அவர் காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியது அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

அவர்கள் இருவரும் என்சிஏவில் பயிற்சி பெற்றுவரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் கூடிய விரைவில் இருவரும் இந்திய அணியில் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை