SLW vs INDW, 1st ODI: இலங்கையை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி!

Updated: Fri, Jul 01 2022 17:51 IST
Image Source: Google

இந்திய மகளிர் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் ஆடிவருகிறது. டி20 தொடரை இந்திய மகளிர் அணி 2-1 என வென்றது.

அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியில் தொடக்க வீராங்கனை ஹாசினி பெரேரா(37), நிலாக்‌ஷி டி சில்வா(43), மாதவி(28) ஆகிய மூவரைத்தவிர வேறும் யாருமே அவர்கள் அளவிற்குக்கூட ரன் அடிக்கவில்லை. அதனால் 48.2 ஓவரில் வெறும் 171 ரன்களுக்கு இலங்கை மகளிர் அணி ஆல் அவுட்டானது.

172 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வெர்மா அதிரடியாக விளையாடி 35 ரன்கள் அடித்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் (44) மற்றும் ஹர்லீன் தியோல் (34) ஆகிய இருவரும் பொறுப்புடன் பேட்டிங் ஆடினர். 

பின்வரிசையில் பூஜா வஸ்ட்ராகர் 19 பந்தில் 2 சிக்ஸர்களை விளாசி 21 ரன்கள் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன்மூலம் 38ஆவது ஓவரில் இலக்கை அடித்து இந்திய மகளிர் அணி4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை