IPL 2025 Retention Rules: பழைய விதிமுறையை மாற்ற முயற்சிக்கும் பிசிசிஐ!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. நடைந்து முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இதில் கேகேஆர் அணி வெல்லும் மூன்றாவது சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடப்பு சீசன் முடிவடைந்துள்ள நிலையி, அடுத்த ஐபிஎல் தொடருக்கான விவாதத்தில் ரசிகர்கள் இறங்கியுள்ளனர். ஏனெனில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு மேக ஏலம் நடைபெறவுள்ளது. இதனால் எந்தெந்தந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள், வீரர்கள் ஏலத்தில் யாரை வாங்க அணிகள் ஆர்வம் காட்டும் என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன.
முன்னதாக அடுத்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் அணிகளில் ரிடென்ஷன் விதிகளின்படி வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிக்க பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி தற்போதுள்ள 3+1 விதிகளின்படி அணியில் ஏற்கனவே உள்ள 3 வீரர்களையும், ரைட் டு மேட்ச் (ஆர்டிஎம்) மூலம் ஒருவரையும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன. ரிடென்க்ஷன் எண்ணிக்கையை அதிகரிப்பது ஏலத்தை அர்த்தமற்றதாகிவிடும் என்று சில ஐபிஎல் மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து வெளியான தகவலின் படி, “ரிடென்க்ஷன் எண்ணிக்கையை 4 இல் இருந்து 6 முதல் 8 வரை உயர்த்தி அதன்பின் ஆர்டிஎமை வைத்திருப்பது என்பது ஏலத்தை ஒரு பயனற்ற செயலாக மாற்றிவிடு.
ஐபிஎல் தொடரில் வீரர்கள் ஏலம் என்பது அதன் அழகை கூட்டியுள்ளது. ஆனால் அதனை குறைத்து மதிப்பிடுவது தொடரை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரவிருக்கு ஐபிஎல் ஏலமானது எப்போதும் போல 3+1 என்ற அடிப்படையிலேயே நடைபெற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் பிசிசிஐ வீரர்களை அதிகரிக்கவே திட்டமிடும் என்ற கருத்துகளும் வருவது குறிப்பிடத்தக்கது.