ஐபிஎல் 2021: வர்ணனையாளர்கள் பட்டியல் வெளியீடு!

Updated: Mon, Sep 13 2021 12:18 IST
Image Source: Google

ஐபிஎல் 14வது சீசனில் 29 போட்டிகள் முடிந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து எஞ்சிய போட்டிகள் வரும் 19ஆம் தேதி முதல் அமீரகத்தில் தொடங்குகிறது. இத்தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் அமீரகம் சென்று தீவிரமாக தயாராகிவருகின்றன.

இந்நிலையில், ஐபிஎல்லை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஐபிஎல் 14ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகளுக்கான வர்ணனையாளர்கள் பெயர்களை அறிவித்துள்ளது.

ஆங்கில வர்ணனையாளர்கள்: ஹர்ஷா போக்ளே, சுனில் கவாஸ்கர், லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக், தீப்தாஸ் குப்தா, அஞ்சும் சோப்ரா, இயன் பிஷப், அலன் வில்கின்ஸ், எம்பாங்வா, நிகோலஸ் நைட், டேனி மோரிசன், சைமன் டௌல், மேத்யூ ஹைடன், கெவின் பீட்டர்சன்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஹிந்தி வர்ணனையாளர்கள்: ஜதின் சப்ரு, சுரேன் சுந்தரம், ஆகாஷ் சோப்ரா, நிகில் சோப்ரா, தன்யா புரோஹித், இர்ஃபான் பதான், கௌதம் கம்பீர், பார்த்திவ் படேல், கிரன் மோர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை