சிஎஸ்கே பயிற்சியாளருக்கு கரோனா; வீரர்கள் அச்சம்!

Updated: Tue, May 04 2021 23:20 IST
Image Source: Google

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. மேலும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்களுக்கு தொற்று உறுதியானது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், நடப்பாண்டு ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைப்பதாக பிசிசிஐ இன்று அறிவித்தது. 

இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்தவர்களுக்கு இன்று கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப்பரிசோதனை முடிவில் சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி க்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் ஹஸ்ஸின் பரிசோதனை முடிவுகளை மறு சோதனைக்கு அனுப்பியுள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் ஹஸ்ஸிக்கு தொற்று இருப்பது உறுதியானது. இருப்பினும் அவரது சோதனை மாதிரிகளை நாங்கள் மறு சோதனைக்கு அனுப்பியுள்ளோம். அந்த முடிவுகள் வெளியான பின்பே எங்களால் எதனையும் உறுதியாக கூற முடியும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி, பேருந்து பராமரிப்பாளர் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை