ஐபிஎல் 2021: மும்பையை வீழ்த்தியது சிஎஸ்கே!

Updated: Sun, Sep 19 2021 23:24 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கிய 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் 30ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டது. 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச பேட்டிங் செய்ய தீர்மானித்ததார். அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர்பிளே முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

 

இருப்பினும் இறுதிவரை அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 88 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்தது. 

இதையடுத்து இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் - அன்மொல்ப்ரீத் சிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. பின் 17 ரன்களில் டி காக் ஆட்டமிழக்க, 16 ரன்னில் அன்மொல்ப்ரீத் சிங்கும் ஆட்டமிழந்தார். 

பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 ரன்களிலும், இஷான் கிஷான் 11 ரன்களிலும், பொல்லார்ட் 15 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இருப்பினும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சவுரப் திவாரி அரைசதம் அடித்து இறுதிவரை போராடினார். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணியால் 136 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை