ஐபிஎல் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியம் உள்ளிட்ட வீரர்களுக்கு கரோனா உறுதியானதால் இத்தொடரின் எஞ்சிய 31 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 

Advertisement

மேலும், இந்தியாவில் கரோனா அதிகரித்துக் காணப்படுவதால், போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 31 போட்டிகளை 27 நாட்களில் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த இரு அணிகளும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. இதனால், முதல் போட்டியே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் அணிகள் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்று பயிற்சிகளில் ஈடுபடலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது. சிஎஸ்கே அணியில் பல வீரர்கள் ஓய்வில்தான் உள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்காத பல வீரர்கள் இருக்கிறார்கள். முதற்கட்டமாக, இவர்களை அமீரகம் அழைத்துச் செல்ல சிஎஸ்கே முடிவு செய்துள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 13 அல்லது 14ஆம் தேதி சென்னை அணி ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக மகேந்திர சிங் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் சென்னை வந்தடைந்துள்ளனர். 

இந்நிலையில் சென்னை அணி செல்லும் அதே தேதியில்( ஆகஸ்ட் 13) மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து வெளியான தகவலில்,“சிஎஸ்கேவைப் போலவே ஐக்கிய அரபு அமீரக அரசிடம் இருந்து தரையிறங்கும் அனுமதிக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன், ஆகஸ்ட் 13ஆம் தேதி துபாய்க்கு செல்லவுள்ளோம். ஏற்கெனவே எங்கள் வீரர்கள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டு மும்பையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், துபாய் சென்றும் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர்” என்று தெர்விக்கப்பட்டுள்ளது. 

Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எஞ்சிய ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை - மும்பை அணிகள் மோதவுள்ளதால் இரு அணியுன் ஒரே நாளில் துபாய் செல்ல திட்டமிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News