ஐபிஎல் 2021: ராஜஸ்தானுக்கு 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த டெல்லி!

Updated: Sat, Sep 25 2021 17:27 IST
IPL 2021: Delhi Capitals finishes off 154/6 their 20 overs
Image Source: Google

ஐபிஎல் தொடரில் 36ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா 10 ரன்களிலும், ஷிகர் தவான் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பந்த் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் 24 ரன்களில் ரிஷப் பந்த் ஆட்டமிழக்க, அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 43 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியனார்.

அதன்பின் களமிறங்கிய அதிரடியாக விளையாடி வந்த ஷிம்ரான் ஹெட்மையர் 28 ரன்களில் நடையைக் கட்டினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களைச் சேர்த்தது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் சேத்தன் சகாரியா, முஸ்தபிசூர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை