ஐபிஎல் 2021: நாளை மறுதினம் யூஏஇ புறப்படும் டெல்லி கேப்பிட்டல்ஸ்!

Updated: Thu, Aug 19 2021 12:29 IST
Image Source: Google

ஐபிஎல் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து இத்தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. 

இதையடுத்து எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளை கடந்தாண்டு போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்து, செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் நடைபெறும் என்றும் அறிவித்தது.

இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நாளை மறுநாள் தனி விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் செல்லவுள்ளது. 

மேலும் காயம் காரணமாக கடந்த முறை நடைபெற்ற ஐபிஎல் தொடரிலிருந்து விலகியிருந்த ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது மீண்டும் விளையாட தயாராகிவுள்ளார். இதனால் இத்தொடரின் போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::