ஐபிஎல் 2021: சிஎஸ்கேவை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது டெல்லி!

Updated: Mon, Oct 04 2021 23:17 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 50ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணி அம்பத்தி ராயுடுவின் அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களைச் சேர்த்தது. இதில் அம்பத்தி ராயுடு 55 ரன்களைச் சேர்த்தார். டெல்லி அணி தரப்பில் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஷிகர் தவான் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் பிரித்வி ஷா 18, ஸ்ரேயாஸ் ஐயர் 2, ரிஷப் பந்த் 15, ரிபால் படேல் 18 என அடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

பின் அதிரடியாக விளையாடி வந்த ஷிகர் தவானும் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதன் மூலம் 19.4 ஓவர்களிலேயே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இலக்கை எட்டி, 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை