ஐபிஎல் 2021 எலிமினேட்டர்: சுனில் நரைன் அதிரடியில் ஆர்சிபியை வீழ்த்தியது கேகேஆர்!
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணி சுனில் நரைனின் அபாரமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 39 ரன்களை சேர்த்தார். கேகேஆர் அணி தரப்பில் சுனில் நரைன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய கேகேஆர் அணிக்கு சுப்மன் கில் - வெங்கடேஷ் ஐயர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். பின் இருவரும் 29 ரன்கள் எடுத்திருந்தநிலையில் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய ராகுல் திரிபாதி, நிதீஷ் ராணாவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சுனில் நரைன் அதிரடியாக விளையாடினார்.
பின் 18ஆவது ஓவரை வீசிய முகமது சிராஜ், சுனில் நரைன் மற்றும் தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஈயான் மோர்கன் - ஷாகிப் அல் ஹசன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் கேகேஆர் அணி ஐபிஎல் 14ஆவது சீசனின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு தகுதிப்பெற்றது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
மேலும் நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை கேகேஆர் அணியை எதிர்கொள்கிறது.