ஐபிஎல் 2021: ஃபார்மிற்கு திரும்பிய கில்; கேகேஆர் அசத்தல் வெற்றி!

Updated: Sun, Oct 03 2021 23:01 IST
IPL 2021: KKR beat SRH by 6 wickets and they're grip the Playoff hopes (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 49ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. 

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல், 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் சுப்மன் கில் - நிதீஷ் ராணா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் சுப்மன் கில் அரைசதம் கடந்து அசத்தினார். 

அதன்பின் 57 ரன்களில் சுப்மன் கில் ஆட்டமிழக்க, 25 ரன்களில் ராணாவும் வெளியேறினார். பின் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதன்மூலம் 19.4 ஓவர்களில் கேகேஆர் அணி இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் கேகேஆர் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தை தக்கவைத்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை