ஐபிஎல் 2021 தகுதிச்சுற்று 2: டெல்லியை 135 ரன்னில் சுருட்டியது கேகேஆர்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பிரித்வி ஷா - ஷிகர் தவான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுக்க முயற்சித்தனர். ஆனால் 18 ரன்களில் பிரித்வி ஷா ஆட்டமிழக்க, அடுத்த வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸும் 18 ரன்களோடு வெளியேறினார்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிகர் தவானும் 36 ரன்களோடு வெளியேற, அடுத்து வந்த ரிஷப் பந்தும் 6 ரன்களில் வெளியேறியதால் அந்த அணி தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் - ஷிம்ரான் ஹெட்மையர் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த முயர்ச்சித்தது. ஆனால் இரண்டு சிக்சர்களை அடித்த ஹெட்மையர் 17 ரன்களுடனு ரன் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக தவான் 36 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களையும் எடுத்தனர். கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.