ஐபிஎல் திருவிழா 2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு!

Updated: Mon, May 03 2021 11:12 IST
IPL 2021, KKR v RCB – Blitzpools Fantasy XI Tips, Prediction & Pitch Report (Image Source: Google)

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14ஆவது சீசனில் இன்றைய ஆட்டத்தில் ஈயான் மோர்கன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம் : நரேந்திர மோடி விளையாட்டரங்கு, அகமதாபாத்.
  • நேரம்: இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நடப்பு சீசனில் மோதிய முதல் போட்டியில் பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது. 

தலா 7 போட்டிகளில் விளையாடியுள்ளன. பெங்களூரு 5 வெற்றிகளையும், கொல்கத்தா 2 வெற்றிகளையும் வசப்படுத்தி உள்ளன. அதேசமயம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்து உள்ள ஆர்சிபி அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழலில் களமிறங்க உள்ளது.

இரு அணிகளிலும் அதிரடியான பேட்டிங் வரிசையும், அபாரமான பந்துவீச்சும் இருப்பதால் இன்றைய போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

நேருக்கு நேர்

ஐபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளும் 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் பெங்களூரு அணி 13 முறையும், கொல்கத்தா அணி 15 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

உத்தேச அணி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுப்மான் கில் / ஷெல்டன் ஜாக்சன், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, சுனில் நரைன் / பென் கட்டிங், ஈயான் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக், பாட் கம்மின்ஸ், சிவம் மாவி, பிரசீத் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி, தேவ்தத் பாடிக்கல், ரஜத் பாடிதர் / முகமது அசாருதீன், கிளென் மேக்ஸ்வெல், ஏபி டி வில்லியர்ஸ், ஷாபாஸ் அகமது, டேனியல் சாம்ஸ், கைல் ஜேமீசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - டி வில்லியர்ஸ், தினேஷ் கார்த்திக்
  • பேட்ஸ்மேன்கள் - மேக்ஸ்வெல், கோலி, மோர்கன், படிதர்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரஸ்ஸல், சாம்ஸ்
  • பந்து வீச்சாளர்கள் - ஹர்ஷல் படேல், பாட் கம்மின்ஸ், வருண் சக்ரவர்த்தி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை