ஐபிஎல் 2021: கேஎல் ராகுல் அதிரடியில் சிஎஸ்கேவை பந்தாடியது பஞ்சாப்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 53ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச திர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி ஃபாஃப் டூ பிளெசிஸின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஃபாஃப் டூ பிளெசிஸ் 76 ரன்களைச் சேர்த்தார். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், கிறிஸ் ஜோர்டன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு கேஎல் ராகுல் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனல் அவருடன் விளையாடி மயங்க் அகர்வால் 12, சர்ப்ராஸ் கான் 0, ஷாருக் கான் 8, மார்க்ரம் 13 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த கேஎல் ராகுல், இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெறச் செய்தார். இதன் மூலம் 13 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 8 சிக்சர், 7 பவுண்டரிகளை விளாசி 98 ரன்களை எடுத்தார். சிஎஸ்கே அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் 5ஆம் இடத்தில் உள்ளது.