ஐபிஎல் 2021: தினேஷ் கார்த்திக்கின் இறுதிநேர கேமியோ; சிஎஸ்கேவிற்கு 172 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 38ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடி வீரர் வெங்கடேஷ் ஐயரும் 18 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திரிபாதி 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய மோர்கன் 8 ரன்னிலும், ரஸ்ஸல் 20 ரன்னிலும் நடையைக் கட்டினர். இருப்பினும் பின்னர் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் - நிதீஷ் ராணா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆணி 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களைச் சேர்த்தது. சென்னை அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர், ஜோஷ் ஹசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.