ஐபிஎல் திருவிழா 2021: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு

Updated: Thu, Apr 29 2021 12:39 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற உள்ள 24 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள இரு அணிகளும் தலா 2 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன. எனவே, 3வது வெற்றிக்காக இரு அணிகளுமே தீவிர முயற்சியில் ஈடுபடும் என்பதால் இப் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் : மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் : அருண் ஜெட்லி மைதானம், டெல்லி.
  • நேரம் : மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் சூர்யகுமார், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட் ஆகியோர் நடப்பு ஐபிஎல் சீசனில் சரிவர சோபிக்க தவறி வருகின்றன. இவர்கள் அதிரடி காட்ட தவறியதால் மும்பை அணியின் நிலை இப்போது பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. மேலும் மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா - டி காக் இணை சிறப்பாகவே செயல்படுகிறது. பவுலிங்கை பொருத்தவரை போல்ட், பும்ரா கூட்டணி எதிரணி பேட்ஸ்மேன்களை தயக்கமின்றி திணறடிக்கிறது. இதுதவிர ராகுல் சாஹர் சுழற்பந்து வீச்சில் அணியின் பலமாக இருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது. ஆர்ச்சர், ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன், ஆன்ட்ரு டை போன்றோர் இல்லை என்பது அந்த அணிக்கு இழப்புதான். தொடக்க பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லரையும், கேப்டன் சஞ்சு சாம்சனையும் பெரிதும் நம்பியிருக்கிறது . இது தவிர மனன் வோரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்னும் சிறப்பாக ஸ்கோர் செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

அடுத்த இடங்களில் வரும் ஷிவம் துபே, டேவிட் மில்லர், ரியான் பராக் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. மேலும் ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் தன் பங்குக்கு ஒவ்வொரு போட்டியிலும் அசத்தி வருகிறார். பவுலிங்கில் சேத்தன் சகாரியா, ஜெய்தேவ் உனாத்கட், முஸ்தபிசூர் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினால் ராஜஸ்தானுக்கு வெற்றி எட்டாக்கனியாகவே இருக்கிறது. 

நேருக்கு நேர்

ஐபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளும் 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 12 வெற்றிகளை பெற்று சமநிலையில் உள்ளது.

உத்தேச அணி

மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா (இ), குயின்டன் டி கோக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, கீரோன் பொல்லார்ட், ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார், ஜஸ்பிரீத் பும்ரா, டிரெண்ட் போல்ட்

ராஜஸ்தான் ராயல்ஸ் - ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ஷிவம் தூபே, ரியான் பராக், ராகுல் திவேத்தியா, கிறிஸ் மோரிஸ், ஜெய்தேவ் உனட்கட், சேதன் சகரியா, முஸ்தபிசூர் ரஹ்மான்.

பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - சஞ்சு சாம்சன் , ஜோஸ் பட்லர், இஷான் கிஷன்
  • பேட்ஸ்மேன்கள் - ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்ரவுண்டர்கள் - கிறிஸ் மோரிஸ்,பொல்லார்ட்
  • பந்து வீச்சாளர்கள் - போல்ட், பும்ரா, ரஹ்மான்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை