ஐபிஎல் 2021: அமீரகத்தில் பயிற்சியை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ்!
கரோனா தொற்றால் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள ஆட்டங்கள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
அதன்படி தொடங்கும் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
இதற்காரணமாக கடந்த வாரமே இரு அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்று, 6 நாள்கள் தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னை அணி நேற்று முந்தினமே பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பித்தது.
அந்தவகையில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று தங்கள் பயிற்சிக்கு திரும்பியுள்ளது. அதன்படி மும்பை இந்திய அணியைச் சேர்ந்த இஷான் கிஷான், பியூஷ் சாவ்லா, ஆதித்யா டாரே, தவால் குல்கர்னி ஆகியோர் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படம் மற்றும் காணொளியை மும்பை இந்தியன்ஸ் இன்று வெளியிட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் இப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் அந்த அணி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.