ஐபிஎல் திருவிழா 2021: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன்!

Updated: Sat, Apr 17 2021 13:07 IST
Image Source: Google

ஐ.பி.எல். தொடரின் 9ஆவது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-வார்னர் தலைமையிலான சன்ரைசஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் : மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • நேரம் : இரவு 7.30 மணி
  • தேதி : ஏப்ரல் 17, 2021
  • இடம் : எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை.

மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி முன்னோட்டம்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடம் அணியிடம் தோற்றது. அதன்பின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 2ஆவது வெற்றியை பெறும் ஆர்வத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளது. 

ஹைதராபாத் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோல்வியை தழுவி உள்ளது. முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 10 ரன்னிலும், 2ஆவது போட்டியில் பெங்களூருவிடம் 6 ரன்னிலும் தோற்றது. இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்றைய ஆட்டத்தில் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இரு அணியிலும் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இப்போட்டியில் யார் வெற்றிபெறுவர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நேருக்கு நேர்

ஐபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளும் 16 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை இந்தியன்ஸ் 8 முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 முறையும் என வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டிக்கான எதிர்பார்ப்பு பண் மடங்கு அதிகரித்துள்ளது.

உத்தேச அணி

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், குர்னால் பாண்டியா, ராகுல் சஹார், மார்கோ ஜன்சென், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர், விருத்திமான் சஹா, மனீஷ் பாண்டே, ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ஹோல்டர், விஜய் சங்கர், அப்துல் சமத், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சபாஷ் நதீம், நடராஜன். 

பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர் - இஷான் கிஷன், குயின்டன் டி காக்
  • பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா, அப்துல் சமத்
  • ஆல்ரவுண்டர்கள் - ஜேசன் ஹோல்டர், ஹர்திக் பாண்டியா
  • பவுளர்கள் - ரஷித் கான், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட், புவனேஷ்வர் குமார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை